மூலையிலிருந்து..

மூலையில் தனிமையில் கசங்கி கிடப்பதிலிருந்து வானத்தில் மீண்டு பறப்பதாய் மாறி மாறி  சுழல்கிறது  இந்த பாதை . 

பறக்கும்போது தொலைவதை விட , தனிமையில் நான்கு சுவற்றுக்குள்ளே என்னை தொலைத்து பின் மீட்டெடுத்த சம்பவங்களின் அனுபவங்கள் என்றும் மீண்டும் விரிய காத்திருக்கின்றன.

பறத்தலின் அனுபவங்களை அவளின்  ஒளியிழையில் பதிய முயன்று தோற்றுப்போயிருக்கிறேன். 

திசைகளற்ற வெளியில் பறத்தலில் வெற்றி தோல்வி பற்றிய குறிப்புகள்  
இருப்பதாக தெரியவில்லை அல்லது அவ்வாறாக சொல்லித்  தேற்றிக்  கொள்கிறேன்.

நாளை பரிசளிக்கப்பட வேண்டிய நினைவுக்குறிப்புகள் பதியப்படாமல் போனது பற்றி அவளுக்கு தெரியாது. நாளை என்னவென்பதைப்பற்றி நான் அறியாததைப்  போல்..தோற்றுப்போதல் அனுபவங்களின்  மேல்  அடுக்குகளை  உணர்த்துவதாய் தொடங்கியிருக்கிறது இந்த வருடம்..

பறத்தலை எதிர்நோக்கி மூலையிலிருந்து..

 








Comments

Popular posts from this blog

My Take on Mobile Photography.

எண்ணங்கள்..

A Book's Whisper.