எண்ணங்கள்..

யாரிடமாவது நினைப்பதை கொட்டி தீர்த்துவிட வேண்டும் போலிருக்கிறது.இந்த எழுத்து நடை சமீபத்தில் படித்த புத்தகத்தில் இருந்து ஒட்டிக்கொண்டு விட்டது.பொதுவாக, என் நண்பரகள் அனைவரும் என்னை எப்போதும் இந்த விதத்தில் பயன்படுத்திக்  கொள்வார்கள்.அவர்களின்  கதையை/சிக்கலை சொல்லும் போது ஒரு மரம் போல கேட்டுக்கொண்டிருப்பேன் . நான் எப்போதும்  சிக்கலை தீர்த்து வைக்க முற்பட்டதில்லை.அது எனக்கு தெரியாது  என்பதே உண்மை . பெரும்பாலும், இதுதான் நியதி; இதை செய்யலாம் ;செய்தால்  வினைகள் இப்படி இருக்கலாம்  என்பதைப்  போல யோசனைகள் தருவேன். அத்தகைய நண்பர்களிடம்  கூட என்னால் பகிர  முடியாது. அவர்களால் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாது அல்லது இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை  என்பதை போல ஒரு பதிலைத் தருவார்கள் அல்லது நிலையை விளக்க முற்படும்போதே எடை போடத் தொடங்கிவிடுவார்கள். நான் பதில்களைத் தேடவில்லை.பதில்கள் இல்லாமலே சிலர் முன்னேறிக்கொண்டு இருக்கின்றனர் என்பது எனக்கு தெரியும் . அவளிடம் கூட  சிலமுறை சொல்லியிருக்கிறேன். பொறுமையாக கேட்டிருக்கிறாள். ஏதோ ஆறுதல் தரும் எழுத்துக்கள் பதிலாக வரும் .கடந்த சில நாட்களாகவே அவளை போனில் அழைத்து பேசலாம்  தோன்றுகிறது . அது எந்த விதத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கும் என்று யோசிக்க முயல்வதில்லை.அவள் ஏதோ விதத்தில் என்னை தவிர்ப்பதாகவே படுகிறது. நான் சிலமுறையே போனில் அவளிடம் பேசியிருக்கிறேன். அவையும்  ஒரு சில நிமிடங்களே நீண்டிருக்கும் .பேசியதில் நிறைய கருத்துக்களில் ஒற்றுமை  இருப்பதாக நான் நினைக்கிறன். அவளுக்கும் இது தெரிந்திருக்கும். அவளை போனில் கூப்பிட்டு இப்படியெல்லாம் நான் நினைத்து கொண்டிருக்கிறேன்; இந்த மாதிரியான எண்ணங்கள் தொந்தரவு செய்கிறது என்று பட்டியலிடுவதினால் என்ன நிகழ்ந்துவிடாய் போகிறது என்ற நினைப்பு வேறு..

மிச்சம் அடுத்த அமர்வில்.. 06/06/2017 . 

Comments