Posts

Showing posts from January, 2017

2017 ன் முதல் நாள் அனுபவம்.

Image
இந்த பதிவு 2017 இன் முதல் நாளை பற்றியது.  அந்த இடத்தை பற்றி கேட்டிருக்கிறேன்.Saree Shoot செய்வதற்கு நண்பர்கள் பரிந்துரைத்த இடம் அது.அதன் பிறகு நேற்றுதான் (Jan 1,2017) அங்கு செல்ல நண்பன் ஒருவன் யோசனை சொன்னான்.வேறு வேலை இல்லை என்பதாலும், கொஞ்சம்  ஆர்வம் இருந்ததாலும் ஒப்புக்கொண்டேன் .அப்பொழுது வரை  சென்னையில் அருமையான, இத்தனை நாளை தவறவிட்ட ஒரு இடத்திற்கு போக போகிறேன் என்பதை அறிந்திருக்கவில்லை. மாயாஜால் திரையரங்கருகில் நண்பணின்  நண்பர்களுக்காக காத்திருந்தோம்.பொறுமை இழக்கும் தருவாயில் வந்து சேர்ந்தனர். அவ்விடம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தக்ஷிண சித்ராவாகும் .  புகைப்படம் எடுக்க 100 என்று போட்டிருந்தது . தேவை இருக்காது என்றே எண்ணி முதலில் மறுத்து பின் நண்பன் சொன்னதால் பையில் இருந்த ஒற்றை நூறைக் கொடுத்தேன்.  வெயில் வெளியில் தகித்தலும், உள்ளே நல்ல சூழலை உணர முடிந்தது.  3 மணிக்கு பொம்மலாட்டம் நிகழ்ச்சி இருப்பதாக சொல்லவும், முதலில் அங்கு செல்ல ரூ 10 கொடுத்து அனுமதி வாங்கி விரைந்தோம். அது ஆம்பூர் இல்லம் என்று பெயரிடப்பட்ட  இடத்தில்  நடந்தது.அங்கு ஏற்கனவே ஆட்டம் தொடங்கியிருந்தது